ஆப்நகரம்

படம் திருட்டுத் தனமாக வெளியாவதை தடுக்க முடியுமா? விஷால்

திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை அரசால் தடுக்க முடியுமா என்று விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 30 Sep 2017, 11:36 pm
திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை அரசால் தடுக்க முடியுமா என்று விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil vishal says about new entertainment tax
படம் திருட்டுத் தனமாக வெளியாவதை தடுக்க முடியுமா? விஷால்


தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இந்த 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தமிழக அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அப்போது டிக்கெட் கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரி மட்டும் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் திரைப்படங்களுக்கான புதிய கேளிக்கை வரி கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், தமிழ் படங்களுக்கான கேளிக்கை வரியானது 30 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. புதிதாக வரும் படங்களுக்கு 10 சதவீதமும், மற்ற படங்களுக்கு 20 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தமிழ் படங்களுக்கு 7 சதவீதமும், மற்ற மொழிப்படங்களுக்கு 14 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புதிய கேளிக்கை வரியை ஏற்றுக்கொள்ள முடியாது. முழுவதுமாக கேளிக்கை வரியை நீக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், இந்த புதிய கேளிக்கை வரி விதிப்பு மிகுந்த அதிர்ச்சி தருகிறது. தமிழ் சினிமா ஒன்றும் கொடி கட்டி பறக்கவில்லை. அனைத்து படமும் பாகுபலி படம் அல்ல என்று கூறியுள்ளார். திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதை 100 சதவீதம் அரசால் தடுக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்