ஆப்நகரம்

வைரஸ் மட்டும் இல்லை, இதுவும் ஆபத்து தான்.. விஷாலின் சக்ரா பட த்ரில்லிங் ட்ரெய்லர்

விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

Samayam Tamil 27 Jun 2020, 5:55 pm
விஷால் அடுத்து நடித்துள்ள சக்ரா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு விஷால் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை படத்தில் நடித்திருந்தார். அது முழுக்க முழுக்க சைபர் கிரைம் பற்றிய த்ரில்லர் படம் தான். அது போலவே சக்ரா படமும் ஆன்லைன் ஹேக்கர்கள் மோசடிகள் பற்றிய படமாக அமைந்துள்ளது.
Samayam Tamil Vishals Chrakra Movie Trailer


எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ள சக்ரா படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா, கே. ஆர். விஜயா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் சக்ரா படத்தில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சென்னையில் போலீஸ் முழு கண்காணிப்பில் இருந்தாலும் 49 வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதனால் ஒட்டு மொத்த நகரமும் என்ன நடக்கிறது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அதில் ஒரு வீட்டில் ராணுவ வீரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அசோகச் சக்கரத்தை அந்த திருடர்கள் கொள்ளையடித்து சென்று இருக்கின்றனர். அதை வைத்துத்தான் படத்தின் மீதி கதையும் இருக்கப் போகிறது என்பது ட்ரெய்லர் பார்க்கும் போதே தெரிகிறது. மேலும் ஹேக்கர்கள் இந்த விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. மிலிட்டரியில் வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவமான அசோகச் சக்கரத்தை திருடியவர்களை விஷால் கண்டறிந்தாரா என்பது தான் மீதி படமாக இருக்கும்.


மேலும் ஹேக்கர் ஒருவர் பேசும் வகையில் ட்ரெய்லரின் இறுதியில் வரும் ஒரு வசனமும் கவனத்தை ஈர்க்கிறது. "கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டும் இல்லை, வயர்லெஸ் நெட்வர்க்கும் ஆபத்து தான். வெல்கம் டு டிஜிட்டல் இந்தியா." கொரோனா வைரஸ் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுபோன்று நெட்வொர்க்கை ஹேக் செய்பவர்களும் மிகப்பெரிய ஆபத்து தான் என காட்டியுள்ளனர்.

விஷால் தன் விஷால் பிலிம் பேக்டரி மூலமாக தயாரித்து நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வெளிவந்துள்ள ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மட்டுமின்றி சக்ரா படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் சக்ரா படம் வெளிவர உள்ளது.

சக்ரா படம் மட்டுமின்றி விஷால் தற்போது தன் கைவசம் துப்பரிவாளன் 2 படத்தையும் வைத்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறிவிட்ட நிலையில், மீதம் இருக்கும் பகுதிகளை விஷால் தானே இயக்குனராக களமிறங்கி எடுத்து முடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா பிரச்சனை முடிந்து அரசு ஷூட்டிங் நடத்த அனுமதி தரும் போது துப்பறிவாளன் 2 படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்