ஆப்நகரம்

விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: விஷால் தொடக்கம்!

விவசாயிகளின் நலன் காக்க 1 ரூபாய் புதிய திட்டத்தை நடிகர் விஷால் அறிமுகப்படுத்தினார்.

Samayam Tamil 7 Apr 2017, 4:44 pm
விவசாயிகளின் நலன் காக்க 1 ரூபாய் புதிய திட்டத்தை நடிகர் விஷால் அறிமுகப்படுத்தினார்.
Samayam Tamil vishal starts a farmer welfare scheme for one rupee
விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: விஷால் தொடக்கம்!


தமிழக விவசாயிகள் நலன் காக்கும் வகையில் ‘1 ரூபாய்’ என்ற புதிய திட்டத்தை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகர் விஷால் அறிமுகப்படுத்தினார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், துணைத் தலைவர்கள் பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், செயலாளர்கள் ஞானவேல்ராஜா, கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, கலைப்புலி எஸ்.தாணு, கேயார், ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

இந்த விழாவில் விஷால் பேசியதாவது:

‘‘தமிழ் சினிமாவின் பொற்காலம் இன்று முதல் தொடங்கி விட்டது. நல்லதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் எங்களின் உழைப்பு இருக்கும். நலிந்த தயாரிப்பாளர்கள் என்ற வார்த்தை இனி நீக்கப்படும். தயாரிப்பாளர்களின் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படும். இந்த நிர்வாகம் 24 மணி நேரமும் உழைக்கும்.

விவசாயிகளின் நலன் காக்க... தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி சமூகம் சார்ந்தவற்றிலும் எங்கள் நிர்வாகம் ஈடுபடும். பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வரும் தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் புது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன்படி ஏதாவது ஒரு நாளில் தமிழகம் முழுவதும் விற்பனையாகும் டிக்கெட்டுகளில் இருந்து 1 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, அதிலிருந்து வரும் தொகை விவசாயிகளின் நலனுக்கு வழங்கப்படும்‘‘ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்