ஆப்நகரம்

புதிய மன்னர்களாக தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் விஷால் அணியினர் போட்டி

தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விஷால் அணியினர் புதிய மன்னர்களாக போட்டியிடுகின்றனர்.

TNN 21 Feb 2017, 6:51 pm
தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கயிருக்கிறது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட விஷால் உள்பட 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
Samayam Tamil vishal teammates competing on tamil producer council election as a puthiya mannargal
புதிய மன்னர்களாக தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் விஷால் அணியினர் போட்டி

இதில் விஷாலின் வேட்பு மனுவை நிராகரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கேயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், விஷால் தாக்கல் செய்த மனுவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டுதான் தேர்தல் அதிகாரி அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. எனவே தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டது சரிதான் என்று கூறி இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


தற்போது விஷால் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியின பெயர் புதிய மன்னர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vishal teammates competing on tamil producer council election as a puthiya mannargal

அடுத்த செய்தி

டிரெண்டிங்