ஆப்நகரம்

ஸ்ரீரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விஷால் திட்டம்!

திரை உலகினர் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார் தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி மீது நடிகர் சங்க தலைவர் நடிகர் விஷால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 18 Jul 2018, 3:19 pm
சென்னை: திரை உலகினர் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார் தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி மீது நடிகர் சங்க தலைவர் நடிகர் விஷால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil 10


தெலுங்கு, தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீரெட்டி அடுக்கடுக்காக புகார்களைக் தெரிவித்து வருகிறார். தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக சில நாட்களாக ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஸ்ரீரெட்டி அளித்த பேட்டியில், அமெரிக்காவின் சிகாகோவில், தெலுங்கு, தமிழ் நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். தெலுங்கு, தமிழ் பிரபல முன்னணி நடிகைகளும், நடிகர்களின் மகள்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் அமெரிக்க போலிசாருக்கு நான் உதவுகிறேன் என்றார்.

அங்கு பாலியல் தொழில் ஈடுபடுவதால் அந்த முன்னணி நடிகைகள் ஒரு வருஷத்தில் பெரும் வருமானத்தை ஒரு வாரத்தில் சம்பாதித்து விடுவதாக அவர் தெரிவித்தார்.

விஷால் நடவடிக்கை:
இந்நிலையில் திரை உலகினர் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி மீது, நடிகர் சங்க தலைவர் விஷால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vishal to take legal action against Sri Reddy?

அடுத்த செய்தி

டிரெண்டிங்