ஆப்நகரம்

விஷால் விவகாரம்: ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் இடையே கைகலப்பு

சென்னை தியாகராய நகரில் நடிகர் விஷாலின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

TNN 15 Nov 2016, 12:00 pm
சென்னை: சென்னை தியாகராய நகரில் நடிகர் விஷாலின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
Samayam Tamil vishals suspension from producer council clashes between supporters and opponents
விஷால் விவகாரம்: ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் இடையே கைகலப்பு


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகரும், 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான விஷால் நீக்கப்பட்டதையடுத்து இந்த கைகலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக, சங்க விதிகளை மீறி செயல்பட்ட காரணத்தால் நடிகர் விஷாலை தற்காலிக நீக்கம் செய்துள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

விஷாலின் தற்காலிக நீக்கத்தையடுத்து, அவரது எதிர்ப்பாளர்கள் தேங்காய் உடைத்துபோது ஆத்திரமடைந்த விஷால் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்