ஆப்நகரம்

’அயோக்யா’வாக ’டெம்பர்’ ரீமேக்; பூஜையுடன் விஷால் படப்பிடிப்பு தொடக்கம்!

விஷால் நடிக்கும் அயோக்யா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

Samayam Tamil 23 Aug 2018, 7:10 pm
சென்னை: விஷால் நடிக்கும் அயோக்யா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
Samayam Tamil Vishal


கடந்த 2015ல் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டெம்பர்’. இதனை தமிழில் ‘அயோக்யா’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

இப்படத்திற்கான பூஜை சென்னை ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். அயோக்யா படத்தை பி மது, தனது லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பேனரில் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள் ஜிகே ரெட்டி, கலைப்புலி எஸ்.தாணு, ரவி பிரசாத், கே.எஸ்.ரவிகுமார், கட்டரகட்டா பிரசாத், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

லிங்குசாமி உடன் கூட்டணி சேர்ந்த ’சண்டக்கோழி 2’ படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vishal's 'Temper' remake titled 'Ayogya' begins with a pooja.

அடுத்த செய்தி

டிரெண்டிங்