ஆப்நகரம்

ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது விஷாலின் "துப்பறிவாளன்"..!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள “துப்பறிவாளன்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது.

TNN 1 May 2017, 6:21 pm
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள “துப்பறிவாளன்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது.
Samayam Tamil vishals thupparivaalan film going to release on august 11
ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது விஷாலின் "துப்பறிவாளன்"..!


இதற்கு முன்னர் இந்த படத்தை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட நாளில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் சுதந்திர தின விடுமுறைகளை கணக்கில் கொண்டு, வரும் ஆகஸ்ட் மாதம் துப்பறிவாளன் படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் துப்பறிவாளர் கதாபாத்திரத்தில் விஷால் நடிக்கிறார். அவன் இவன் படத்திற்கு பிறகு, துப்பறிவாளன் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர இயக்குநர் பாக்யராஜும் , நடிகர் பிரசன்னாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்சை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vishal's Thupparivaalan film going to release on August 11

அடுத்த செய்தி

டிரெண்டிங்