ஆப்நகரம்

Shershaah Movie : பாலிவுட் படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்!

அஜித்தை வைத்து ‘ஆரம்பம்’ படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

Samayam Tamil 6 May 2019, 4:20 pm
தமிழ் சினிமாவில் பிரபல கமர்சியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். இவர் தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’, ‘சர்வம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடிகர் அஜித்தை வைத்து ஒருபடத்தை இயக்கவுள்ளார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால், அது பேச்சு வாக்கிலே இருக்கிறது.
Samayam Tamil vishnu-vardhan


இந்நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தன், அடுத்ததாக இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் கார்கில் வீரர் விக்ரம் பத்ரா வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்துக்கு, சஹர்ஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கார்கில் வீரர் விக்ரம் பத்ரா கேரக்டரில் பிரபல இந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அஜித்தை வைத்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார்.

இதையடுத்து, நடிகர் அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் அவர் பாலிவுட் படம் இயக்க மும்பை சென்றுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்