ஆப்நகரம்

பாலிவுட் நிறுவனத்துடன் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்த விஷ்ணு விஷால்!

வயாகாம் 18 மூவி என்ற பட தயாரிப்பு நிறுவனத்திற்கு, நடிகர் விஷ்ணு விஷால் அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 19 Mar 2019, 6:06 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்த படத்தின் கதையை அனைவராலும் பாராட்டப்பட்டது.
Samayam Tamil vishnu-vishal


இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அவருக்கு வில்லனாக நடித்த கிறிஸ்டோபர் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ‘சிலுக்குவார்பட்டி’. இந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது விஷ்ணு விஷால் ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வயாகாம் 18 மூவி. தற்போது இந்த நிறுவனத்திற்காக நடிகர் விஷ்ணு விஷால் மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தச் செய்தி சக நடிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்