ஆப்நகரம்

திருமணம் முடித்த ராணாவை கலாய்த்த விஷ்ணு விஷால்! என்ன கூறியுள்ளார் பாருங்க

நடிகர் ராணா மற்றும் மிஹிகா திருமணத்திற்கு வாழ்த்து கூறி உள்ள விஷ்ணு, ராணாவை கலாய்த்து ட்விட் செய்து உள்ளார்.

Samayam Tamil 10 Aug 2020, 3:03 pm
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் ராணா டகுபதி. அவர் தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து உள்ளார். அவர் திருமணம் பற்றி கடந்த பல வருடங்களாகவே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ராணா எதாவது நிகழ்ச்சிகள் அல்லது பேட்டியில் கலந்துகொண்டால் திருமணம் பற்றிய கேள்விகள் நிச்சயம் இருக்கும். இப்படி தொடர்ந்து கேட்பவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு தான் மிஹிகா என்பவரை காதலிப்பதாக கூறி புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ராணா.
Samayam Tamil Rana and Miheeka


அதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ராணா மற்றும் மிஹிகா பஜாஜ் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. அதில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மற்றவர்கள் நேரடியாக வீடியோ மூலமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருமண வாழ்வில் இணைந்துள்ள ராணா - மிஹிகா ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராணாவின் நெருங்கிய நண்பரான தமிழ் நடிகர் விஷ்ணு ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கிறார். அந்த ட்விட்டில் அவர் ராணாவை கலாய்க்கவும் செய்திருக்கிறார்.

"சில வருடங்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார்.. தன்னால் திருமணம் செய்து கொள்வது பற்றி நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று.. இந்த போட்டோவில் இருக்கும் நபர் அவரை போலவே இருக்கிறார். Happy happy life ராணா" என விஷ்ணு விஷால் கூறி உள்ளார்.

விஷ்ணு இப்படி கலாய்த்து இருப்பதற்கு பதில் கூறி இருக்கும் ராணா, "சில வருடங்கள் கடந்து விட்டது.. நன்றி சகோதரா" என கூறி இருக்கிறார்.


ராணாவை இப்படி விஷ்ணு விஷால் கலாய்த்து பதிவிட்டு இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. மேலும் பல பிரபலங்களும் ராணாவுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

மலையாள நடிகர் துல்கர் சல்மான் ட்விட்டரில் வாழ்த்து கூறி உள்ளார். 'உங்களது அழகிய திருமணத்திற்காக வாழ்த்துக்கள் ராணா மற்றும் மிஹிகா. நீங்கள் இணைந்து இருப்பது பெர்பெக்ட் ஆக இருக்கிறது. நிலைமை சகஜமாக இருந்திருந்தால் நான் அங்கு நேரில் வந்து வாழ்த்தி இருப்பேன். எந்த காரணத்திற்காகவும் அதை மிஸ் செய்திருக்க மாட்டேன்' என கூறி உள்ளார்.


மேலும் ராணா மற்றும் மிஹிகா ஆகியோரது திருமண புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் அதிகம் அளவில் நேற்று முதல் வைரலாகி இருக்கின்றன. மேலும் ராணா உடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றையும் மிஹிகா இன்ஸ்டாகிராமில் இன்று வெளியிட்டு இருக்கிறார். அதுவும் மிக அதிக அளவு வைரல் ஆகி இருக்கிறது.

ராணா - மிஹிகா திருமணதிற்கு மிக குறைந்த நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். சுமார் 30 விருந்தினர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டனர் என கூறப்பட்டுள்ளது. ராணா - மிஹிகா குடும்பத்தினர் தவிர நடிகர் சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா, ராம் சரண் மற்றும் அவரது மனைவி, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட வெகு சிலர் மட்டுமே திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

நட்சத்திரத்திற்கு ஹன்சிகா பெயர்.. பிறந்தநாளில் கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் கிப்ட்

அடுத்த செய்தி

டிரெண்டிங்