நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் புரோமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் 'கட்ட குஸ்தி' படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. 'பொன்னியின் செல்வன்' பட புகழ் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகிறது. விஷ்ணு விஷால், ரவிதேஜா இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்த்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குஸ்தி சண்டையை லட்சியமாக கொண்ட நாயகி, தனக்கு வரப்போகும் மனைவி தன்னை விட குறைந்த படிப்பு, குடும்ப பொறுப்புகளை சுமப்பவராக இருக்க வேண்டும் என்ற நீண்ட பட்டியலுடன் காத்திருக்கும் நாயகன். இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் என்ன நடக்கும் என்பதே 'கட்டா குஸ்தி' படம்.
OTT Release: ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்: இந்த வாரம் வெளியாகும் படங்களின் முழு லிஸ்ட்.!
படத்தின் முதல் பாதி முழுவதும் காட்சிக்கு காட்சி காமெடியுடன் பக்கா எண்டர்டெயின்மென்ட்டுடன் நகர்கிறது. இரண்டாம் பாதி எமோஷனல் காட்சிகளால் சீரியசாக செல்கிறது. ஆண் பெண் உறவுகளில் பெண்ணின் முக்கியத்துவம், பெண்கள் அனுபவிக்கும் வலிகள், அவர்களின் சுதந்திரம் இவற்றை புதுவிதமான கதையம்சத்துடன் படமாக கொடுத்துள்ளார் செல்லா அய்யாவு.
விஷ்ணு விஷால் நடிப்பிலும், ஐஸ்வர்யா லஷ்மி ஆக்ஷனிலும் பிண்ணி எடுத்துள்ளனர். படத்தில் நடித்துள்ள மற்ற அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். 'மத்த நாட்ல எல்லாம் போட்டில ஜெயிக்க எதிரிகளோட சண்ட போடனும். இங்க மட்டும்தான் முதல்ல நம்ம குடும்பத்தோட சண்ட போடனும்' போன்ற நச் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாக வெளியாகியுள்ளது 'கட்டா குஸ்தி'.