ஆப்நகரம்

ஜூன் 23ல் ‘கதாநாயகன்’ ரிலீஸ்!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ‘கதாநாயகன்’ படம் ஜூன் 23ம் தேதி வெளியாகவுள்ளது.

Samayam Tamil 21 Mar 2017, 7:13 pm
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ‘கதாநாயகன்’ படம் ஜூன் 23ம் தேதி வெளியாகவுள்ளது.
Samayam Tamil vishnus katha nayagan to be released june month
ஜூன் 23ல் ‘கதாநாயகன்’ ரிலீஸ்!


நடிகர் விஷ்ணு விஷால், ‘மாவீரன் கிட்டு’ படத்தை அடுத்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘கதாநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளனர். பல வருடங்களுக்கு முன் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த படத்தின் பெயர் இது. எனவே அப்படத்தின் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசனிடம் அனுமதி பெற்று இந்த தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றுள்ளது.

‘கதாநாயகன்’ படத்தை விஷ்ணு விஷால் தயாரித்தே வருகிறார். அவரது முந்தைய படமான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை வாங்கி வெளியிட்ட பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது. இந்தப் படம் ஜூன் 23ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதல் முறையாக கேதரின் தெரேசா நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் காமெடியில் கலக்கியிருந்த சூரி இப்படத்திலும் காமெடியில் கலக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்