ஆப்நகரம்

இந்த முறை சுத்தி விஷ்ணு கையில்.. 'மோகன்தாஸ்' டீஸர் வெளியானது

விஷ்னு விஷால் நடித்துள்ள மோகன்தாஸ் படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.

Samayam Tamil 11 Apr 2020, 4:59 pm
தற்போது கொரோனா ஊரடங்கு உள்ள நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் டீசரை வெளியிடலாமா என ட்விட்டரில் கேட்டிருந்தார். அதற்கு அதிக ரசிகர்கள் வெளியிடுங்கள் என்றே வாக்களித்து இருந்தனர்.
Samayam Tamil Vishnu in Mohandas


அதனால் இன்று தனது அடுத்த பட டீசரை வெளியிட்டுள்ளார். மோகன்தாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை இயக்குனர் முரளி கார்த்திக் எழுதி இயக்குகிறார். அவர் இதற்கு முன்பு களவு என்ற படத்தை இயக்கியவர்.

மோகன்தாஸ் டீசரில் விஷ்ணு யாரோ ஒருவரை வெறித்தனமாக சுத்தியால் அடித்து கொள்கிறார். அதன் பிறகு ரத்தம் சொட்ட சொட்ட சென்று தன் சட்டையை கழற்றி வாஷிங் மெஷின் உள்ளே போடுகிறார்.

இந்த சில நொடிகள் வரும் டீஸரே பார்க்கும் நம்மை கதிகலங்க வைக்கிறது. அதனால் முழு படமும் படு த்ரில்லிங்காக இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. “சுத்தி இந்த முறை என் கையில் இருக்கிறது” என விஷ்னு இந்த கதை பற்றி பதிவிட்டுள்ளார்.

மேலும் இது உண்மை கதையில் அடிப்படையில் இருக்கலாம் என டீசரில் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்த படத்திற்காக விஷ்ணு அதிகம் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்