ஆப்நகரம்

‘விஸ்வரூபம் 2’ டிரைலர் நாளை வெளியீடு?

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.

TNN 6 Nov 2017, 7:23 pm
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.
Samayam Tamil vishwaroopam part two trailer release date
‘விஸ்வரூபம் 2’ டிரைலர் நாளை வெளியீடு?


கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் பலர் நடித்த ‘விஸ்வரூபம்‘ படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு பல சர்சைக்கிடையில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படம் வெளிநாடுகளில் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வெளியானது. அந்த சர்ச்சைகளால் படம் ஓடி வசூலையும் கொடுத்தது.முதல் பாகம் தயாரான போதே படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஏறக்குறைய முடித்து வைத்திருந்தார் கமல்ஹாசன். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த நான்கு வருடங்களாக படம் வெளிவராமல் இழுத்துக் கொண்டே போனது. சமீபத்தில் இரண்டாம் பாகத்திற்காக எடுக்க வேண்டிய சில காட்சிகளையும் எடுத்து முடித்தார்

கமல்ஹாசன்.நாளை கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டிரைலர் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்