ஆப்நகரம்

பெங்களூரு சிறையில் இனி சசிகலாவை பார்க்க ஆதார் அட்டை தேவை!!

சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளைப் பார்க்க இனிமேல் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்ற கர்நாடகா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

TOI Contributor 5 Apr 2017, 4:55 pm
சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளைப் பார்க்க இனிமேல் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்ற கர்நாடகா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil visitors to sasikala ilavarasi needs to show aadhar card
பெங்களூரு சிறையில் இனி சசிகலாவை பார்க்க ஆதார் அட்டை தேவை!!

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகளை காண வருவோர் கட்டாயம் ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த கர்நாடகா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, பெலகாவி மாவட்டத்தில் உள்ள இண்டல்கா, பல்லாரி, மைசூரு ஆகிய மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சிறிய சிறைச்சாலைகள் வரை அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி இதுதொடர்பாக சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில் ‘‘சிறையில் உள்ள கைதிகளை காண வரும் உறவினர்கள், நண்பர்களின் ஆதார் அட்டை வாங்கி அதில் இருக்கும் எண்ணை வருகை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதனால் இனி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரனை பார்க்க வேண்டும் என்றால், ஆதார் அட்டை அவசியம் தேவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

visitors to sasikala, ilavarasi needs to show aadhar card

அடுத்த செய்தி

டிரெண்டிங்