ஆப்நகரம்

‘விசுவாசம்’ படத்தில் அஜீத்தின் புதிய தோற்றம்!

அஜீத் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் புதிய கெட்டப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

TNN 23 Jan 2018, 12:51 pm
அஜீத் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் புதிய கெட்டப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil viswasam ajith new look revealed
‘விசுவாசம்’ படத்தில் அஜீத்தின் புதிய தோற்றம்!


நடிகர் அஜீத் தற்போது நடிக்கவுள்ள படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக அஜீத் மீண்டும் இளமை தோற்றத்துடன் கருமையான ஹேர்ஸ்டைலில் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் அஜீத்தின் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தலைமுடி கருப்பாக இருந்தாலும் முகத்தில் வெள்ளை முடியுடன் அந்த புகைப்படத்தில் அஜீத் காட்சியளிக்கின்றார்.

மேலும் ‘விசுவாசம்‘ படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளதாகவும், இந்த அறிவிப்பு அஜீத் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்