ஆப்நகரம்

கர்நாடக விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தைத் தந்த ‘விஸ்வாசம்’!

கர்நாடகாவில் வெளியான ‘விஸ்வாசம்’, பல கோடி ரூபாயை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது.

Samayam Tamil 23 Jan 2019, 4:49 pm
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் தல அஜித். தற்போது இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகையின் போது வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பலர்நடித்திருந்தனர். படத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
Samayam Tamil viswasam


இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குடும்பப் பெண் ரசிகர்கள் இப்படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ கர்நாடகாவில் ரூ. 9 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு இனி வருவது எல்லாம் லாபம் தானாம். மேலும், விரைவில் ‘விஸ்வாசம்’ கன்னடத்தின் டப் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்