ஆப்நகரம்

கன்னடத்திலும் மாஸ் காட்டும் தல அஜித்! விஸ்வாசம் டிஆர்பி சாதனை..

விஸ்வாசம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு உள்ள ஜாகமல்லா படம் இரண்டாவது முறையாக டிவியில் ஒளிபரப்பானது டிஆர்பியில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

Samayam Tamil 31 Jul 2020, 10:49 am
தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் தமிழில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மிகப் பிரம்மாண்ட ஹிட் ஆனது. சிறுத்தை சிவா இயக்கி இருந்த அந்த படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை தியேட்டரில் பார்த்து பலரும் கண்ணீர் விட்டார்கள். அந்த வீடியோக்கள் அப்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் வந்ததை நான் பார்த்தோம்.
Samayam Tamil Viswasam


அதன் பிறகு தமிழில் சன் டிவியில் இந்த திரைப்படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பாகும் போதும் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. தமிழில் மட்டும் தான் அஜித்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது என நினைத்து விட வேண்டாம். கன்னடத்திலும் சமீபத்தில் விஸ்வாசம் படம் டப்பிங் செய்யப்பட்ட ஜாகமல்லா படம் டிவியில் ஒளிபரப்பாகி இருந்தது. இது இரண்டாவது முறை தான் என்றாலும் மிக அதிக அளவிலான ரசிகர்கள் அதை பார்த்து இருக்கிறார்கள்.

அதனை எத்தனை பேர் பார்த்தார்கள் என்பது பற்றிய விபரங்கள் தற்போது வெளிவந்திருக்கிறது. BARC வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி ஜாகமல்லா திரைப்படத்தை 58 லட்சத்து 97 ஆயிரம் ரசிகர்கள் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். இந்த வருடத்தின் 29 ஆவது வாரத்தில் கன்னட டிவியில் ஜாகமல்லா படம் தான் முதலிடத்தில் இருக்கிறது. விஸ்வாசம் படத்தின் மூலமாக உதயா டிவி முதலிடத்தை பெற்று இருக்கிறது.

இந்த செய்தியை தல அஜித்தின் ரசிகர்கள் தற்போது மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் இது பற்றி அதிக அளவு பதிவிட்டு வருகின்றனர்.


விஸ்வாசம் படத்திற்கு கன்னடத்தில் கிடைத்துள்ள டிஆர்பி அஜித்தின் முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறது. இதற்கு முன்பு 50.53 லட்சம் ரசிகர்கள் பார்த்தது தான் அதிகபட்சமாக இருந்தது. அதனை தற்போது முந்தி இருக்கின்றது விஸ்வாசம் கன்னட டப்பிங் படத்தின் இரண்டாவது ஒளிபரப்பு.

விஸ்வாசம் படம் தமிழில் இதுவரை மூன்று முறை டிவியில் ஒளிபரப்பாகி இருக்கிறது. மூன்று முறையும் மிகப் பெரிய அளவில் அந்த படத்திற்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருந்தது.

முதல் முறையாக சென்ற வருடம் மே ஒன்றாம் தேதி தல அஜித் பிறந்த நாளுக்கு விஸ்வாசம் படம் ஒளிபரப்பான போது அதனை 18.14 மில்லியன் ரசிகர்கள் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2020ல் ஜனவரி 18 அன்று ஒளிபரப்பானது விஸ்வாசம். பொங்கல் ஸ்பெஷலாக அது வெளியான போது 15.59 மில்லியன் ரசிகர்கள் டிவியில் பார்த்து ரசித்தனர். அதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூலை 12ம் தேதி ஒளிபரப்பான போது 16.12 மில்லியன் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தை பார்த்ததாக அதிகாரப்பூர்வமாக புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சாதனையை விஸ்வாசம் பட தயாரிப்பாளரே ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறி இருந்தார்.

அந்த அளவுக்கு குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருந்து வரும் விஸ்வாசம் படம் இன்னும் எத்தனை முறை டிவியில் ஒளிபரப்பினாலும் இதே அளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

விஸ்வாசம் படம் தல அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான நான்காவது படம். அதற்கு முன்பு வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் அவர்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்