ஆப்நகரம்

மாணவர்களுக்காக அஜித் ஜெர்மனியில் ஹெலிகாப்டர் நிறுவனத்தினருடன் நடத்திய ஆலோசனை!

நடிகர் அஜித், மாணவர்களுக்காக ஜெர்மனியில் உள்ள வாரியோ ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Nov 2018, 5:38 pm
அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம்.ஐ.டி. கேம்பஸில் இருக்கும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ட்ரோன் குறித்து ஆய்வுசெய்ய தக்ஷா என்ற குழுவை உருவாக்கினர். இந்த குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து வருகிறார்.
Samayam Tamil ajith-daksha


சமீபத்தில் அஜித்தின் தக்‌ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் 2018 யுஏவி சேலஞச்’ போட்டியில் பங்கு பெற்று சர்வதேச அளவில் 2வது இடத்தைப் பிடித்தது. தக்‌ஷா குழுவின் அடுத்த திட்டம் தொடர்பாக நடிகர் அஜித் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு வாரியோ ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்