ஆப்நகரம்

பெரிய தொகைக்கு அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் இந்தி உரிமையை வாங்கிய பிரபலம்!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் இந்தி உரிமையை பாலிவுட்டின் பிரபலம் மனிஷ் வாங்கியுள்ளார்.

Samayam Tamil 18 Sep 2018, 3:49 pm
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் இந்தி உரிமையை பாலிவுட்டின் பிரபலம் மனிஷ் வாங்கியுள்ளார்.
Samayam Tamil Viswasam1


நடிகர் அஜித் ‘விவேகம்’ படத்தை அடுத்து தற்போது நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியிடுவதற்காக விரைவாக முடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது படத்தின் வியாபார சம்பந்தமான தகவல் வந்துள்ளது. அதாவது ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக உரிமையை ‘அறம்’ பட தயாரிப்பாளர் ராஜேஷ் வாங்கியுள்ளார். அதேபோல் ‘விஸ்வாசம்’ படத்தின் இந்தி உரிமையை பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் மனிஷ், மிகப்பெரிய தொகையை கொடுத்து வாங்கியுள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்