ஆப்நகரம்

Viswasam படத்தின் பெண்களுக்கான சிறப்பு காட்சி : தல ரசிகைகள் ஆராவாரம்!

‘விஸ்வாசம்’ படத்தின் பெண்களுக்கான சிறப்பு காட்சியை திரையிட திரையரங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Samayam Tamil 8 Jan 2019, 2:10 pm
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் படத்தில் விவேக், தம்பிராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகை விருந்தாக வெளியாகிறது. இந்த படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் முதல் நாளே விற்பனையாகிவிட்டது.
Samayam Tamil viswasam


இந்த நிலையில் தல அஜித்துக்கு பெண் ரசிகைகளும் அதிகம் என்பதால் பெண்களுக்கு என சிறப்பு காட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒருசில திரையரங்குகளுக்கு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட திருவான்மியூரில் உள்ள ஒரு திரையரங்க நிர்வாகிகள் ஜனவரி 10ஆம் தேதி பெண்களுக்கான சிறப்புக்காட்சி ஒன்றை காலை 10.30 மணிக்கு திரையிடுகின்றனர்.

இதனையடுத்து ஐடி துறையில் பணிபுரியும் பெண்கள் பலர் இந்த காட்சிக்கு விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்