ஆப்நகரம்

தமிழகத்தில் 6வது வாரமாக 125 தியேட்டர்களில் கலக்கி வரும் ‘விஸ்வாசம்’!

‘விஸ்வாசம்’ படம் இன்னும் 6வது வாரமாக தமிழகத்தில் 125 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Samayam Tamil 15 Feb 2019, 3:25 pm
2019ம் ஆண்டு தொடக்கத்தின் முதல் வெற்றிப் படம் அஜத்தின் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தை குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் படத்தின் வசூலிக்கு குறையே இல்லை. புதுப்படங்கள் அதிகம் வரும் நிலையிலும் ‘விஸ்வாசம்’ படம் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
Samayam Tamil viswasam


6வது வாரத்திலும் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 125 திரையில் ஓடுகிறதாம். இதனை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உறுதி செய்துள்ளனர். சிவா & அஜித் கூட்டணியில் அதிக வசூல் கொடுத்த படம் ‘விஸ்வாசம்’. அஜித்தின் சினிமா பயணத்தில் இது ஒரு முக்கிய படம் என்றும் சிறப்பு அந்தஸ்த்தை பெற்றுள்ளது. படம் இதுவரை மொத்தமாக ரூ 185 கோடி வசூலை உலகளவில் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்