ஆப்நகரம்

விவேகம் லைசென்சஸ விட விஸ்வாசம் கொஞ்சம் கம்மி தான்..? எவ்வளோ தெரியுமா?

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக உரிமை தற்போது ரூ.47 கோடிக்கு விலை போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Sep 2018, 3:43 pm
அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக உரிமை தற்போது ரூ.47 கோடிக்கு விலை போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil viswasam


சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு வரவுள்ளது. நடிகர் அஜீத் நான்காவது முறையும் சிவாவுடன் இணைவது ரசிகர்கள் விருப்பமில்லை. இருந்தாலும் படத்தின் வெளியான பர்ஸ்ட் லுக்கைப் பார்த்து ரசிகர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக உரிமையை ரூ 47 கோடிக்கு விலை போனதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான ‘விவேகம்’ ரூ 50 கோடி வரை வியாபாரம் ஆனது. அப்படம் தோல்வியடைந்ததால் ‘விஸ்வாசம்’ படத்தின் வியாபாரமும் கொஞ்சம் குறைந்ததாக கூறப்படுகிறது.

‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, விவேக், யோகி பாபு உட்பட பலர்நடிக்கின்றனர். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்