ஆப்நகரம்

தடை எல்லாம் ‘அடிச்சு தூக்கி’ ‘வேட்டி கட்டி’ 'வெளுத்துக்கட்ட' வெளியாகுது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம்!

சென்னை: விஸ்வாசம் படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து நாளை படம் வெளியாவில் எவ்வித சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Samayam Tamil 9 Jan 2019, 6:13 pm
சென்னை: விஸ்வாசம் படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து நாளை படம் வெளியாவில் எவ்வித சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
Samayam Tamil Viswasam F


அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், நாளை வெளியாகவுள்ள இப்படத்தை காணரசிகர்கள் ஆர்வமாகவுள்ளனர்.

இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கு எதிராக கோவை, திருப்பூர் ,ஈரோடு , பகுதிகளில் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்றிருந்த கடன் பாக்கி 78 லட்சத்தை திருப்பித்தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடைகோரி திரைப்பட பைனான்ஸியர் உமாபதி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து அப்பகுதிகளில் ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாக்கி தொகையில் 35 லட்ச ரூபாய் இன்றே வழங்கவதாகவும் மீதம் உள்ள தொகையை 4 வார காலத்துக்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாக ‘விஸ்வாசம்’ பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து, தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதால், நாளை அப்பகுதிகளில் படம் வழக்கம் போல ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்