2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் உள்பட ஒரு சில சாதாரண படங்களும் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அப்படி வெளியாகும் படங்களில் ஏதாவது ஒரு சில படங்கள் மட்டும் சிறந்த படங்களின் பட்டியலில் சேர்கிறது. அந்த வகையில், 2018ம் ஆண்டு வெளியான 184 படங்களில் டாப் 10 மற்றும் சிறந்த படங்களில் வட சென்னை, 2.0, பரியேறும் பெருமாள், ராட்சசன், நடிகையர் திலகம், 96, கோலமாவு கோகிலா என்று பல படங்கள் சிறந்த படங்களின் பட்டியலில் இணைந்தது.
அதே போன்று, இந்தாண்டு திரைக்கு வரும் 200க்கும் அதிகமான படங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் உள்பட சில சாதாரண ஹீரோக்களின் படங்களும் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைப் பற்றி இங்கு பார்ப்போம்…
Also Read This: தமிழ் சினிமாவை மிரள வைக்கும் படங்கள்: நீயா? நானா? போட்டியில் மாஸ் ஹீரோக்கள்!
Also Read This: இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியாகும் படங்கள்!
Also Read This: தல, தலைவருடன் மோதும் கதிர்!
பேட்ட:
இயக்குனர்: கார்த்திக் சுப்புராஜ்
இசையமைப்பாளர்:அனிருத்
நடிகர்கள்: ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், குரு சோமசுந்தரம், மேகா ஆகாஸ், சனந்த் ரெட்டி, மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன் ஆகியோர் பலர்
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்தாண்டு காலா மற்றும் 2.0 ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இப்படங்களைத் தொடர்ந்து 2019ம் ஆண்டில் முதல் படமாக பேட்ட படம் திரைக்கு வருகிறது. இதுவரை ரஜினி நடிப்பில் வராத படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வாசம்:
இயக்குனர்: சிவா
இசையமைப்பாளர்: இமான்
நடிகர்கள்: தல அஜித், நயன்தாரா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, அனிகா, ஜகபதி பாபு
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க குடும்ப கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவா என்றாலே குடும்ப கதையை மையப்படுத்திய படமாக இருக்கும் என்றே கூறலாம்.
சிகை:
இயக்குனர்: ஜகதீசன் சுபு
இசையமைப்பாளர்: ரோன் எதன் யோகன்
நடிகர்கள்: கதிர் (பரியேறும் பெருமாள்), ரித்விகா, மீரா நாயர், மயில்சாமி, ராஜேஷ் சர்மா, மால் மரோசா, பிர்லா போஸ், விஷாலினி, முத்துகுமார், சசி நடராஜன், கனி வெங்கடேஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சிகை. வழக்கத்திற்கு மாறா நடிகர் கதிர் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம், ரஜினியின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களுக்கு போட்டியாக வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதல்முறையாக நேரடியாக ஜீ 5 தளத்தில் வெளியாகும் படம் இது தான்.