ஆப்நகரம்

பாகுபலி, பைரவா சாதனையை விஞ்சிய வசூலில் விண்ணை தொட்ட தல அஜித்தின் ‘விவேகம்’

பல விமர்சனங்களை தாண்டி தல அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

TNN 28 Aug 2017, 11:33 pm
பல விமர்சனங்களை தாண்டி தல அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படம் வசூல் சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil vivegam 4 day box office collection ajiths film shatters the 1st weekend record of baahubali 2 bairavaa
பாகுபலி, பைரவா சாதனையை விஞ்சிய வசூலில் விண்ணை தொட்ட தல அஜித்தின் ‘விவேகம்’


சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விவேகம்’ படம் முதல் வார இறுதிநாள் வசூல் மட்டும், பாகுபலியை விஞ்சி விண்ணைத் தொடும் சாதனையை படைத்துள்ளது.
சென்னையில் மட்டும் இந்த வார இறுதி நாட்களில் மட்டும் 5.75 கோடி அள்ளியுள்ளது. அதோடு ஒட்டுமொத்தமாக ரூ. 150 கோடி வசூல் செய்து ரூ. 100 கோடிகள் ஈட்டும் பாக்ஸ் ஆபிஸ் படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

முன்னதாக பாகுபலி முதல் 3 நாள் வசூல் சராசரியாக ரூ. 3.24 கோடி இருந்தது. ஆனால் விவேகம் படம் ரூ. 5.75 கோடி ஈட்டியுள்ளது. பைரவா ரூ. 2.20 கோடி ஈட்டியிருந்தது.

இந்தப் படம் மலேசியாவில் மட்டுமே ரூ 8 கோடி, அமெரிக்காவில் ரூ 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vivegam 4-day box office collection: Ajith's film shatters the 1st weekend record of Baahubali 2, Bairavaa

அடுத்த செய்தி

டிரெண்டிங்