ஆப்நகரம்

பர்ஸ்ட் லுக் வெளியீடு:பைரவாவை பின்னுக்கு தள்ளிய விவேகம்..!

ஒரு நாளில் அதிக அளவிலான ரீடிவீட் மற்றும் லைக்குகளை பெற்று பைரவா திரைப்பட பர்ஸ்ட் லுக் சாதனையை விவேகம் திரைப்படம் முந்திச் சென்றுள்ளது.

TNN 2 Feb 2017, 12:34 pm
ஒரு நாளில் அதிக அளவிலான ரீடிவீட் மற்றும் லைக்குகளை பெற்று பைரவா திரைப்பட பர்ஸ்ட் லுக் சாதனையை விவேகம் திரைப்படம் முந்திச் சென்றுள்ளது.
Samayam Tamil vivegam beats bairavaa in retweets and likes in twitter
பர்ஸ்ட் லுக் வெளியீடு:பைரவாவை பின்னுக்கு தள்ளிய விவேகம்..!


பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் ’தல’ அஜித்குமார் நடித்துள்ள ’தல 57’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே ‘விவேகம்’ என்ற பெயர் சமூக வலைத்தளங்களை அலற வைத்தது.

விவேகம் பர்ஸ்ட் லுக் வெளியான முதல் ஒரு மணி நேரத்தில் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.இதுதவிர மற்றொரு விஷயத்தலும் விஜயின் ’பைரவா’ பர்ஸ்ட் லுக்கை,விவேகம் முந்தியுள்ளது.

பைரவா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு நாளில் 12,000 ரீ டிவீட்கள் மற்றும் 31 ஆயிரம் லைக்குகளை பெற்றிருந்தது.ஆனால் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கானது,வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் 12 ஆயிரம் ரீ டிவீட்கள் மற்றும் 20 ஆயிரம் லைக்குகளை பெற்று சாதனை படைத்தது.இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

விவேகம் படத்தின் டீசர் வெளியிடப்படும் போது,இதற்கு முன்னர் அஜித் படங்கள் செய்துள்ள சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivegam beats Bairavaa in retweets and likes in Twitter

அடுத்த செய்தி

டிரெண்டிங்