ஆப்நகரம்

Kamal Haasan: தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது; அப்புறம் ஏன் ‘இந்து’ - கமலை கண்டித்த விவேக் ஓபராய்!

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல் ஹாசனுக்கு, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 May 2019, 2:03 pm
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 19ஆம் தேதி கடைசி கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதே நாளில் தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
Samayam Tamil Kamal Vivek


இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்த போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசிய பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ என்றும், அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் குறிப்பிட்டார். இதற்கு இந்து அமைப்புகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ - பிரச்சாரத்தில் கமல் சர்ச்சை பேச்சு!

இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், கமலின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அன்பிற்குரிய கமல் ஹாசன் அவர்களே, நீங்கள் மிகச்சிறந்த கலைஞர். கலைக்கு மதம் கிடையாது.

அதைப் போலவே தீவிரவாதத்திற்கும் மதம் இல்லை. நீங்கள் கோட்சேவை தீவிரவாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஆனால் ஏன் ‘இந்து’ என்று குறிப்பிட்டு பேசுகிறீர்கள்? நீங்கள் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றதால், இப்படி பேசியுள்ளீர்களா? என்று குறிப்பிட்டு,

பாஜக எதிர்ப்பை தொடர்ந்து கமல்ஹாசனின் அரவக்குறிச்சி பிரச்சாரம் திடீர் ரத்து

அதனை கமல் ஹாசனுக்கு டேக் செய்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. கமலின் பேச்சு தேசிய ஊடகங்கள் வரை சென்று, தலைப்புச் செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்