ஆப்நகரம்

தேர்தல் முடிவுக்கு அடுத்தநாளே வெளியாகும் மோடியின் திரைப்படம்!

பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தின் போஸ்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் வெளியிட்டனர். ஒருவேளை பாஜக வென்று மோடி படம் வெளியாகும் சூழல் வந்தால் படம் மாபெரும் ஹிட் ஆகும் என தயாரிப்பு தரப்பு கணித்துள்ளது.

Samayam Tamil 20 May 2019, 6:20 pm
பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தின் போஸ்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் வெளியிட்டனர்.
Samayam Tamil modi movie poster


மக்களவைத் தேர்தல் சமயத்தில் வெளியிடப்படுவதாக இருந்த இந்தப்படம் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கூறி தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.

இதையடுத்து வரும் 24-ம் தேதி பி.எம்.நரேந்திரமோடி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் வெளியிட்டனர்.

மோடி வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியிட சிலர் இடையூறு செய்கிறார்கள். நிச்சயம் அவர்களது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு படம் வெற்றிகரமாக வெளியாகும் என்றிருந்தார் மோடி வேடமேற்று நடித்த நடிகர் விவேக் ஓபராய். அதன்படி படம் வெளியாக உள்ளது. ஒருவேளை பாஜக வென்று மோடி படம் வெளியாகும் சூழல் வந்தால் படம் மாபெரும் ஹிட் ஆகும் என தயாரிப்பு தரப்பு கணித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்