ஆப்நகரம்

எடிட்டரை காதல் திருமணம் செய்த சின்னத்திரை தொகுப்பாளினி!

பிரபல தொகுப்பாளின பரீனா ஆசாத், எடிட்டர் ரஹ்மானை காதல் திருமணம் செய்து கொண்டார்.

TNN 28 Oct 2017, 4:27 pm
பிரபல தொகுப்பாளின பரீனா ஆசாத், எடிட்டர் ரஹ்மானை காதல் திருமணம் செய்து கொண்டார்.
Samayam Tamil vj farina azad got married with editor
எடிட்டரை காதல் திருமணம் செய்த சின்னத்திரை தொகுப்பாளினி!


சின்னத்திரையில் பிரபல நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பரீனா ஆசாத். இவர் கிச்சன் கலாட்டா, செலிபிரிட்டி இண்டர்வியூ, சினிமா ஸ்பெஷல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு மாதமாக அவரை காணவில்லை.

திடீரெ தனதுபேஸ்புக்கில் தன்னுடைய திருமண தகவல்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார்.பரீனா ஆசாத். பரீனா திருமணம் திருமணம் செய்து கொண்டது அவருடன் பணியாற்றிய நிகழ்ச்சி எடிட்டர் ரஹ்மானை. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது நீண்ட நாள் காதல் தற்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது.



இவர்களுடைய திருமணம் அக்டோபர் 20ந் தேதி இஸ்லாமிய முறைப்படி நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் அர்ஜுன், ராஜ்கமல், லதாராவ், சுபாஷ், சுமையா, சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்