ஆப்நகரம்

விஜய் ஓட்டிய சைக்கிளின் விலை தெரிந்தால் அப்டியே ஷாக் ஆகிடுவீங்க

வாக்குச்சாவடிக்கு விஜய் ஓட்டி வந்த சைக்கிளின் விலை ரூ. 22 ஆயிரத்து 500 மட்டுமே. சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டு ஜார்ஜியாவுக்கு பறந்துவிட்டார்.

Samayam Tamil 7 Apr 2021, 5:01 pm
ஓட்டு போட விஜய் சைக்கிளில் வந்ததை பார்த்தவர்கள் அதன் விலை உள்ளிட்ட விபரங்களை கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil wanna know the price of vijays bicycle
விஜய் ஓட்டிய சைக்கிளின் விலை தெரிந்தால் அப்டியே ஷாக் ஆகிடுவீங்க


விஜய்

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. மக்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டதை விட விஜய் தன் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. கருப்பு, சிவப்பு நிறத்தில் இருந்த அந்த சைக்கிளை பார்த்தவர்கள் அதன் விபரங்களை தெரிந்து கொள்ள கூகுள் செய்கிறார்கள். மான்ட்ரா நிறுவன தயாரிப்பு தான் விஜய் ஓட்டி வந்த சைக்கிள். 16 கிலோ எடை கொண்ட அதன் விலை ரூ. 22 ஆயிரத்து 500 ஆகும்.

சைக்கிள்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தான் விஜய் அந்த சைக்கிளில் வந்ததாக நினைத்து அவரை அனைவரும் பாராட்டினார்கள். வாவ் வாத்தியின் சைக்கிள் ரெய்டு, மாஸ்டர் ஸ்ட்ரோக். சைக்கிளில் வந்து அந்த மெகா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தன் ரசிகர்களுக்கு மெசேஜ் கொடுத்துவிட்டார். பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமானவர்களை சும்மா விட வேண்டாம் என்று தேர்தல் நாளில் நினைவூட்டினார் என்றெல்லாம் ரசிகர்கள் பேசினார்கள்.

கார்

விஜய்யை அவரின் ரசிகர்கள் புகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் சைக்கிள் ரெய்டு குறித்து விளக்கம் வெளியிடப்பட்டது. வீட்டிற்கு அருகிலேயே வாக்குச்சாவடி இருந்ததால் காரில் வராமல் சைக்கிளில் வந்தார். மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை என்று விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை பார்த்தவர்கள், எந்திரன் படத்தில் வரும் குப்பம் காட்சி புகைப்படத்தை போட்டு என்னாடி இது என்று கேள்வி எழுப்பினார்கள். விஜய் அவர் வசதிக்காக சைக்கிளில் வர அது வேறு மாதிரி ஆகிவிட்டது.

தளபதி 65

சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய விஜய் அதே வேகத்தில் ஜார்ஜியாவுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை அண்மையில் தான் சென்னையில் நடந்தது. பூஜையில் ஹீரோயின் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளாததை அறிந்த ரசிகர்கள் கடுப்பானார்கள். சென்னையில் பூஜையை முடித்துவிட்டு ஜார்ஜியாவில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த கிளம்பிவிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்