ஆப்நகரம்

Nayanthara Vignesh Shivan: அந்த பிரச்சனை இல்ல பந்த பிரச்சனையால் குல தெய்வ கோவிலுக்கு போன நயன்தாரா

Nayanthara temple visit: நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலுக்கு சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 12 Apr 2023, 1:26 pm
Nayanthara, Vignesh Shivan temple visit: நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து திடீரென்று குல தெய்வ கோவிலுக்கு சென்றது ஏன் என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil wanna know the rela reson for nayanthara vignesh shivans temple visit
Nayanthara Vignesh Shivan: அந்த பிரச்சனை இல்ல பந்த பிரச்சனையால் குல தெய்வ கோவிலுக்கு போன நயன்தாரா


​நயன்தாரா​

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடந்த அந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். விக்கியின் உறவினர்களுக்கு தங்க நகைகளை பரிசாக அளித்து அவர்களை திக்குமுக்காட வைத்தார் நயன்தாரா.

​பந்தங்கள்​

Nayanthara: நயன்தாரா பற்றி யாரும் சொல்லாத விஷயத்தை சொன்ன சரண்யா: தலைவி வேற ரகம்

திருமணத்தின்போது தங்களை அழைக்கவில்லை என விக்னேஷ் சிவன் உறவினர்கள் சிலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். நயன்தாரா தங்களை மதிக்கவே இல்லை என்றார்கள். திருமணத்திற்கு பிறகு இரட்டை குழந்தைகள் பிறந்தும் தங்களை கண்டுகொள்ளவில்லை என்றார்கள் விக்னேஷ் சிவனின் உறவினர்கள். இது ஒரு பிரச்சனையாகவே இருக்கிறதே என ஜோதிடரை அணுகினாராம் நயன்தாரா.


​கோவில்​

குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஜோதிடர் தெரிவித்தாராம். இதையடுத்தே தஞ்சாவூரில் இருக்கும் விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலுக்கு சென்றாராம் நயன்தாரா. மேலும் விக்னேஷ் சிவனின் உறவினர்களை சந்தித்து சமாதானமாக பேசவும் செய்தாராம். நயன்தாரா சொல்வதில் இருக்கும் உண்மையை புரிந்து கொண்ட உறவுக்காரர்களும் சமாதானம் ஆகிவிட்டார்களாம்.

​பிரச்சனை​

திருமணமானதில் இருந்தே ஏதாவது பிரச்சனையாக இருக்கிறது. திருமணமான நேரம் சரியில்லை. அதனால் மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்ளுமாறு ஜோதிடர் அறிவுரை வழங்கியதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் குல தெய்வ கோவிலில் பார்த்தவர்கள் பிரச்சனையை தீர்க்குமாறு பிரார்த்தனை செய்ய வந்திருக்கிறார்கள் போன்று என்றார்கள்.

​உறவுகள்​


நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குல தெய்வ கோவிலுக்கு சென்றதற்கு உறவுக்கார பிரச்சனை தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. உறவுகள் ரொம்ப முக்கியம். அவர்களை பகைத்துக் கொண்டு வாழக் கூடாது என்று நினைக்கிறாராம் நயன்தாரா. அனைத்து சொந்தமும் வேண்டும் என்பதால் தான் அவர்களை தேடிச் சென்று சமாதானம் பேசியிருக்கிறாராம். தன் பக்கத்து சொந்தங்களுக்கு நயன்தாரா முக்கியத்துவம் கொடுப்பது விக்னேஷ் சிவனை நெகிழ வைத்துவிட்டதாம்.

​கெரியர்​

கெரியரை பொறுத்தவரை நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. மேலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவனோ பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் எடுக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து தங்களின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் ஷுப் யாத்ரா குஜராத்தி மொழி படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

Lady superstar 75: நயன்தாராவின் கெரியரில் முதல் முறையாக...

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்