ஆப்நகரம்

Rapido: குடும்ப கஷ்டம், வேலையில்லை, ரேபிடோ ஓட்டும் விருது பெற்ற இயக்குநர்

வேலையில்லாமல் ரேபிடோ பைக் ஓட்டி சம்பாதிக்கிறார் விருது பெற்ற இயக்குநர் ஒருவர். இது தெரிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 18 Aug 2022, 11:22 am
விருது பெற்ற இயக்குநர் ஒருவர் குடும்பத்தை காப்பாற்ற ரேபிடே பைக் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
Samayam Tamil ward winning director is a rapido driver
Rapido: குடும்ப கஷ்டம், வேலையில்லை, ரேபிடோ ஓட்டும் விருது பெற்ற இயக்குநர்


கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பால் பலரும் வேலை இழந்தனர். வேலை இல்லையே என்கிற வருத்தத்தில் சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. குடும்பத்திற்காக கிடைத்த வேலைக்கு சென்றவர்களும் உண்டு. இந்நிலையில் தான் கர்நாடக மாநிலம் பெங்களூரில் விருது பெற்ற இயக்குநர் ஒருவரின் பரிதாப நிலை குறித்து தெரிய வந்துள்ளது.

இயக்குநர்

பெங்களூரில் வேலை செய்யும் பராக் ஜெயின் என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் வேலை செய்யும் வீ வொர்க் அலுவலகத்தில் என்னை பிக்கப் செய்ய ரேபிடோ பைக் ரைடர் ஒருவர் வந்தார். பயணத்தின்போது, எந்த மாடியில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார். இந்த அலுவலகத்தை தெரியுமா என்று கேட்டேன். ஆமாம் சார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இதே கட்டிடத்தில் தான் வேலை பார்த்தேன் என்றார்.

வேலை இழப்பு

சீன நிறுவனத்தில் வேலை செய்தேன். ஆனால் மார்ச் 2020ம் ஆண்டு சீன ஆப்ஸுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வேலை இழந்தேன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் வேறு வேலை கிடைக்கவில்லை. படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றலாமா என யோசித்தேன். நான் சேமித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் போட்டு மினி சீரீஸ் இயக்கினேன். 15 திரைப்பட விழாக்களில் அதற்கு விருது கிடைத்தது. ஓடிடியில் இருந்து வாய்ப்பு வந்தது. ஆனால் கமர்ஷியல் பிரச்சனைகளால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை என அந்த டிரைவர் மேலும் தெரிவித்தார்.

பைக்

இரண்டு ஆண்டுகளாக பணக்கஷ்டம். அதனால் தான் பகுதி நேரமாக ரேபிடோ ஓட்டுகிறேன் என்றார். தான் ரேபிடோ பைக் ஓட்டுவதை அம்மாவிடம் தெரிவிக்கவில்லை. தெரிந்தால் வருத்தப்படுவார் என்று மறைத்துவிட்டார். அவர் வேலைக்காக காத்திருக்கிறார். யாராவது உதவி செய்யுங்கள் என்று பராக் ஜெயின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்த இயக்குநரின் பெயர் விக்னேஷ் நாகபூசனம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்