ஆப்நகரம்

Cauvery Calling: தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன சமந்தா!

நடிகை சமந்தா நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக காவேரி அழைப்பு எனும் அமைப்பின் தீர்வை முன் மொழிந்துள்ளார்.

Samayam Tamil 26 Aug 2019, 1:40 pm
2010ல் வெளியான "பானா காத்தாடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா."நீதானே என் பொன் வசந்தம்", "நான் ஈ", "கத்தி", "24", 'மெர்சல்", "சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக் கன்னியாக வலம் வருகிறார்.
Samayam Tamil Samantha Akkineni


தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விஜய் பட இயக்குநருடன் அக்டோபரில் களமிறங்கும் கார்த்தி!

திருமணம் முடிந்த பின்னாலும் சமந்தா படங்களில் நடிக்கச் சென்றதை அப்பொழுது அனைவரும் வியப்பாக பார்த்தார்கள். ஆனால் அவருக்கு தற்போதும், பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமந்தா தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்குகிறார். திருமணத்திற்கு பிறகும் முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.

இது சினிமாவில் ஆச்சர்யமான விசயமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சமந்தா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, தனி ஹீரோயினாகவும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் ஓ பேபி எனும் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. தற்போது சர்வானத்திர்கு ஜோடியாக தமிழில் வெற்றி பெற்ற 96 ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.

கஞ்சா குடித்த பிரபல இயக்குநர்!

இவர்தன் வலைதளபக்கத்தில் தொடர்ச்சியாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். சமூக கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். தற்போது இந்தியா முழுதும் நிலவும் தண்ணிர் பிரச்சனைக்கு தீர்வாக Cauvery calling அமைப்பு முன்னெடுக்கும் தீர்வை அவர் முன்மொழிந்திருக்கிறார் இதனை ஒரு வீடியோ பதிவாக அவர் வெளியிட்டுள்ளார்.

ஜாம்பி படம் எப்படி இருக்கும்? யாஷிகா ஆனந்த் விளக்கம்!

சமந்தா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்...

நாடு முழுதும் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தனியாளாக என்ன செய்ய முடியும் என, என்னைப் போல் நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அதற்கான தீர்வுதான் இது. Cauvery calling இதன் மூலம் நதிகளைமீட்டெடுக்கலாம், நதிகள் அழிவதை தடுக்கலாம், மரங்களை நடுவதன் மூலம் இதனை நாம் முன்னெடுக்க வேண்டும்.



நான் ஒரு லட்சம் மரக்கன்றுகளை இந்த அமைப்பின்மூலம் நடுவதற்கு பொறுப்பேற்றுள்ளேன். அதே போல் உங்கள் பணியை இந்த அமைப்பின் மூலம் தொடங்குங்கள் என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த சமூக அக்கறையை அனைவரும் பாராட்டி பகிர்ந்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்