ஆப்நகரம்

2 Point 0: ரஜினிகாந்தின் 2.0 படத்தின் உரிமையை கைப்பற்றிய என்.வி.ஆர். சினிமா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் உரிமையை என்.வி.ஆர்.சினிமா கைப்பற்றியுள்ளதாக லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Oct 2018, 7:57 pm
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் உரிமையை என்.வி.ஆர்.சினிமா கைப்பற்றியுள்ளதாக லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rajinikanth


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் 29ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக, வரும் 3ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் படத்தை வெளியிடும் உரிமையை என்.வி.ஆர்.சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்