ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு வெற்றி வரும் 18ல் பிரகாசிக்கட்டும்: ராகவா லாரன்ஸ்

வரும் 18ம் தேதி போராடி பெற்ற வெற்றியை கொண்டாட உலகத்தமிழர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 13 Feb 2017, 4:11 am
உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள், சினிமா பிரபலங்கள் என தமிழர்கள் ஒன்று திரண்டு நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் எதிரொளி காரணமாக ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
Samayam Tamil we will celebrate jallikattu victory on 18th february says actor raghava lawrence
ஜல்லிக்கட்டு வெற்றி வரும் 18ல் பிரகாசிக்கட்டும்: ராகவா லாரன்ஸ்


கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பிறகு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை காண இளைஞர்கள், மாணவர்கள் என மொத்தமாக 300 பேருடன் செல்வதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக என்னை மட்டும் அனுமதித்தனர். மாணவர்களும், இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தம் அளித்தது. இதன் காரணமாக வரும் 18ம் தேதி ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

இதனை கொண்டாட மெரினா சரியானதாக இருக்காது. எனவே, அவரவர் வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்துகொண்டே கேக் வெட்டி ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட வேண்டும். வரும் 18ம் தேதி மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை உலகத்தமிழர் அனைவருக்கும் ஜல்லிக்கட்டு வெற்றி மட்டும் தான் மனதில் இருக்க வேண்டும்.

இதனால், மெரினாவில் எப்படி பிரகாசித்ததோ அதே போல், மெழுகு வர்த்தி ஏந்தியோ அல்லது டார்ச் அடித்தோ உலகத்தமிழர் அனைவரும் ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட வேண்டும் என்று நடிகர் லாரன்ஸ் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

We will celebrate jallikattu victory on 18th February says actor raghava lawrence

அடுத்த செய்தி

டிரெண்டிங்