ஆப்நகரம்

தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் இளைஞர்கள் போட்டி-விஷால் அறிவிப்பு..!

அடுத்தாண்டு நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இளம் தயாரிப்பாளர்கள் போட்டியிடுவார்கள் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

TNN 30 Aug 2016, 12:52 am
அடுத்தாண்டு நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இளம் தயாரிப்பாளர்கள் போட்டியிடுவார்கள் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we will contest in producers council election vishal
தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் இளைஞர்கள் போட்டி-விஷால் அறிவிப்பு..!


நடிகர் விஷாலுக்கும்,தயாரிப்பாளர் சங்கத்துக்குமான சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது புதிய அறிவிப்பின் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் விஷால்.

நேற்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட விஷால்,பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.நடிகர் சங்கம் மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார் குறித்து பதிலளித்த அவர்,”நாங்கள் யாரும் பதவிக்காகவோ,அரசியலில் குதிப்பதற்காகவோ நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை.நடிகர் சங்கத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை.இங்கு இருக்கும் ஒவ்வொரு குண்டூசிக்கும் எங்களிடம் கணக்கு உள்ளது.”என தெரிவித்தார்.

மேலும்,”இதற்கு முன்னர் இருந்த நடிகர் சங்க நிர்வாகத்திடம் எப்படி கேள்வி கேட்டோமோ,அதே போல தயாரிப்பாளர் சங்கத்திடமும் கேள்வி கேட்டோம்.ஆனால் யாரும் இப்போது வரை முறையாக பதிலளிக்கவில்லை.எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில்,படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர்கள் மற்றும் இளம் தயாரிப்பாளர்கள் இணைந்து போட்டியிடவுள்ளோம்.”எனவும் விஷால் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்