ஆப்நகரம்

Prakash Raj: பிரகாஷ்ராஜை தமிழ் படங்களில் நடிக்க விடமாட்டோம் - கே.ராஜன் காட்டம்

பிரகாஷ் ராஜை இனி தமிழ் திரைப்படங்களில் நடிக்கவிடமாட்டோம் என தயாரிப்பாளர் கே ராஜன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2019, 1:13 pm
பிரகாஷ் ராஜை இனி தமிழ் திரைப்படங்களில் நடிக்கவிடமாட்டோம் என தயாரிப்பாளர் கே ராஜன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil prakash raj in tamil film


சினிமாவை தொடர்ந்து தற்போது நேரடி அரசியலில் இறங்கியுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்டார். தற்போது ஆம் ஆத்மி கட்சிக்காக டெல்லியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் பிரசாரம் செய்த போது, நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கள் பறிக்கப்படுவது உண்மை தான் என கூறியிருக்கிறார்.”

நேற்று நான் சொன்னது திரித்து கூறப்பட்டதாகவும், தான் தமிழக மாணவர்களுக்கு எதிராக எதையும் பேசவில்லை என கூறியுள்ளார்.

பிரகாஷ் ராஜினி பேச்சை கண்டித்து, தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகாவில் பிறந்த பிரகாஷ் ராஜை கன்னட சினிமா கைவிட்ட போது, கைகொடுத்து உதவியது தமிழ் திரையுலக இயக்குனர் கே பாலச்சந்தர். தற்போது வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.



இதனால் தமிழக நடிகர்கள் பலரின் வில்லன் கதாபாத்திர வாய்ப்பு பறிபோய் உள்ளது. ஆனால் பிரகாஷ் ராஜ் தமிழ் பட வாய்ப்பின் மூலம் பொருளும், புகழும் நன்றாக சம்பாதித்துள்ளார்.

வட மாநிலத்தவர்கள் இங்கு வேலை பார்ப்பதால், தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. பலர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்.

இப்படி இருக்க பிரகாஷ் ராஜ் இப்படி நன்றி மறந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் மன்னிப்பு கேட்கும் வரை தமிழ் படங்களில் நடிக்கவிட மாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என பேசியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்