ஆப்நகரம்

கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை சுனைனாவுக்கும்: பாவம்

சுனைனாவுக்கு திருமணம் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வருவது அவரை எரிச்சல் அடைய செய்துள்ளது. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்கிறார் சுனைனா.

Samayam Tamil 11 Apr 2021, 8:37 am
கீர்த்தி சுரேஷை போன்றே சுனைனாவும் திருமண வதந்தியால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போதைக்கு தனக்கு திருமணம் இல்லை என்று சுனைனா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil wedding rumours irritate sunaina
கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை சுனைனாவுக்கும்: பாவம்


சுனைனா

நகுலின் காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சுனைனா. மாசிலாமணி, யாதுமாகி, திருத்தணி, நீர்ப்பறவை, வன்மம், தெறி, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். லாக்டவுன் நேரத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி ஆந்தாலஜியில் அவர் சமுத்திரக்கனி மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினார்கள்.

ட்ரிப்

அவர் யோகி பாபுவுடன் சேர்ந்து நடித்த ட்ரிப் படம் அண்மையில் வெளியானது. படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காவிட்டாலும் சுனைனாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் எடுத்திருக்கிறார். படங்கள் தவிர்த்து வெப் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் சுனைனா. அவர் தன் கெரியரில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் விரைவில் சுனைனாவுக்கு திருமணம் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இதை பார்த்து அவர் கடுப்பாகியிருக்கிறார்.

திருமணம்

கெரியர், திருமணம் குறித்து சுனைனா கூறியதாவது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் குறிப்பாக வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஆகும். சில இயக்குநர்கள் என்னை மனதில் வைத்து கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை. நான் கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு திருமணம் என்று எழுதுவதை நிறுத்திவிட்டு என் படங்கள் பற்றி மட்டுமே எழுதுவார்கள் என நம்புகிறேன் என்றார்.

கீர்த்தி சுரேஷ்

இந்த திருமண வதந்தி பிரச்சனை சுனைனாவுக்கு மட்டும் இல்லை கீர்த்தி சுரேஷுக்கும் தான். கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று இதுவரை 4 முறை தகவல் வெளியாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை மாறிக் கொண்டே இருக்கிறார். எனக்கு திருமணம் எல்லாம் இல்லை என்று கீர்த்தியே விளக்கம் அளித்தும் அந்த பேச்சு அடங்கவில்லை. கீர்த்தி சார்பில் அவர் பெற்றோர் கூட விளக்கம் அளித்தனர். அப்படியும் யாரும் நம்பவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்