ஆப்நகரம்

பிரபாஸுக்கும், எனக்கும் திருமணமா?: உண்மையை சொன்ன வாரிசு நடிகை

பிரபாஸுக்கும், தனக்கும் திருமணம் என்று வெளியான தகவல் குறித்து நிஹாரிகா விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 24 Apr 2020, 3:03 pm
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் நிஹாரிகா. விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் மூலம் கோலிவுட் வந்தார். நிஹாரிகா கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு பிசியான நடிகையாக இருக்க ஆசைப்படுகிறார்.
Samayam Tamil niharika konidela


இந்நிலையில் நிஹாரிக்காவுக்கும், பிரபாஸுக்கும் திருமணம். இரண்டு பேரின் குடும்பத்தாரும் சந்தித்து பேசியுள்ளனர். விரைவில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி தீயாக பரவியது.

இது குறித்து நிஹாரிகா கூறியிருப்பதாவது,

இது போன்ற வதந்திகளை யார் பரப்புவது என்றே தெரியவில்லை. அதை மக்கள் எப்படித் தான் நம்புகிறார்கள் என்று வியப்பாக உள்ளது. எனக்கு திருமணம் என்கிற தகவலில் உண்மை இல்லை என்றார்.

பிரபாஸுக்கு முன்பாக நிஹாரிகாவின் பெயர் நடிகர்கள் நாக சவுர்யா, விஜய் தேவரகொண்டா ஆகியோருடன் சேர்ந்து அடிபட்டது. தொடர்ந்து ஏதாவது வதந்தி பரவிக் கொண்டே இருப்பதால் நிஹாரிகா கடுப்பாகியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு படங்களில் நடிப்பதோடு வெப் தொடர்களிலும் கவனம் செலுத்த நிஹாரிகா முடிவு செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பு எத்தனை படங்களில் நடிக்க முடியுமோ அத்தனை படங்களில் நடிக்க விரும்புகிறார்.

இந்நிலையில் தான் நிஹாரிகாவுக்கு பிரபாஸுடன் விரைவில் திருமணம் என்ற தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

பீச்சில் தலைகீழாக நின்ற அமலா பால்: ஆனால் அந்த நடுவிரல் மேட்டர் ஏன்?

அடுத்த செய்தி

டிரெண்டிங்