ஆப்நகரம்

பிக்பாஸ் வீட்டு சுவர் ஏறி தப்பிக்கிறாரா பரணி!! எகிறும் பதட்டம்!!

இந்தி பிக்பாஸ் வீட்டு சுவரைத் தாண்டிக் குதித்து போட்டியாளர் ஒருவர் தப்பித்தது போல், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பரணி தப்பிக்க இருக்கிறாரா என்ற பதட்டம் பார்வையாளர்கள் இடையே அதிகரித்துள்ளது.

TNN 10 Jul 2017, 5:47 pm
இந்தி பிக்பாஸ் வீட்டு சுவரைத் தாண்டிக் குதித்து போட்டியாளர் ஒருவர் தப்பித்தது போல், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பரணி தப்பிக்க இருக்கிறாரா என்ற பதட்டம் பார்வையாளர்கள் இடையே அதிகரித்துள்ளது.
Samayam Tamil what happened when some escapes from the bigg boss tamil
பிக்பாஸ் வீட்டு சுவர் ஏறி தப்பிக்கிறாரா பரணி!! எகிறும் பதட்டம்!!


தமிழக தொலைக்காட்சிகளில் அதிரடியான டிஆர்பிக்கு பெயர்போன பிக்பாஸ் நிகழ்ச்சியில் வியப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் குறைவில்லை. ஆர்த்தி, காயத்ரி மற்றும் ஜூலியானாவுக்கு இடையே நடந்த வாக்குவாதம், கஞ்சா கருப்பு வெளியேற்றம் போன்றவை, மக்களிடையே ஒவ்வொரு நாளும் பலவகையான விவாதங்களை உருவாக்கி வருகின்றன. தற்போது வெளியாகி உள்ள இந்த நிகழ்ச்சியின் புரோமோ பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து வீடியோக்கள், மீம்ஸ்கள் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு மிகவும் விரக்தியான மனநிலைலையில் நடிகர் பரணி வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்தி பிக்பாஸ் 7வது சீசனில் குஷால் தான்டோன் என்பவர் வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டிக் குதித்து செல்வார். குஷாலுக்கும் அவரின் சகப்போட்டியாளரான தனிஷா முகர்ஜிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த குஷால் தான்டோன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் நிகழ்ச்சிக்கு வரவழைத்தனர். இதேபோல், புரோமோ வீடியோவில் நடிகர் பரணி, விரக்தியின் உச்சத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து, காம்பவுண்ட் சுவரில் ஏறிக்கொண்டிருப்பதைப் போன்று வெளியாகியுள்ளது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியே இங்கும் பிரதிபலிக்கிறது. பார்க்கலாம் பரணி என்ன செய்கிறார் என்று.

what happened when some escapes from the bigg boss tamil

அடுத்த செய்தி

டிரெண்டிங்