ஆப்நகரம்

அப்பா, அம்மா மீது மீண்டும் கேஸ் போட்டாரா விஜய்?: உண்மை இதோ

அப்பா, அம்மா உள்பட 11 பேர் மீது விஜய் தொடர்ந்திருக்கும் வழக்கு புதிது அன்று. ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட வழக்கு தான் தற்போது விசாரணைக்கு வரவிருக்கிறது.

Samayam Tamil 21 Sep 2021, 3:37 pm

ஹைலைட்ஸ்:

  • அப்பா, அம்மா மீது வழக்கு தொடர்ந்த விஜய்
  • பீஸ்ட் படத்திற்காக டெல்லியில் விஜய்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Vijay
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தின் முக்கிய காட்சிகளில் நடிக்க விஜய் டெல்லிக்கு சென்றிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் அவரை பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா: பெற்றோர் மீது கேஸ் போட்ட விஜய்யை விளாசும் நெட்டிசன்ஸ்தன்னை ஹீரோவாக்கி அழகு பார்த்து வளர்த்துவிட்ட அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், அம்மா ஷோபா மீதே இந்த விஜய் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே என்று தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தன் பெயரையோ, தன் ரசிகர் மன்றத்தின் பெயரையோ அவர்கள் பயன்படுத்த தடை கோரி தான் விஜய் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆனால் இது புது வழக்கு அல்ல.
தன் மகனை அரசியலுக்கு அழைத்து வர விரும்பும் எஸ்.ஏ. சந்திரசேகர் கடந்த ஏப்ரல் மாதம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் கட்சி துவங்குவதாக அறிவித்தார். மேலும் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் முயற்சியிலும் இறங்கினார்.

இது குறித்து அறிந்த விஜய்யோ, அந்த கட்சிக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்தே தன் பெயரையோ, தன் ரசிகர் மன்றத்தின் பெயரையோ எஸ்.ஏ. சந்திரசேகர், அம்மா ஷோபா உள்ளிட்டோர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு தான் செப்டம்பர் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது. விஜய் புதிதாக எந்த வழக்கும் தொடரவில்லை.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் விஜய்யின் பெயர் மற்றும் ரசிகர் மன்றத்தின் பெயரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்