ஆப்நகரம்

Samantha:கணவரை பிரிந்த பிறகு சமந்தா 5 முறை...

சமந்தா தன் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பிறகு எதற்காக அதிகம் பேசப்பட்டார் என்று பார்ப்போம்.

Samayam Tamil 27 Jun 2022, 4:17 pm
காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பிறகு 5 முறை தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார் சமந்தா.
Samayam Tamil when samantha became headlines
Samantha:கணவரை பிரிந்த பிறகு சமந்தா 5 முறை...


ஃபேமிலி மேன் 2

சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிய இது தான் காரணம் என்று பலர் யூகித்தனர். இந்நிலையில் தன் குடும்பத்தாரையும், கவுரவத்தையும் பாதிக்காதபடி கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்வதாக நாக சைதன்யா கூறினார். இதையடுத்து தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரில் சமந்தா துணிந்து சில காட்சிகளில் நடித்தது தான் பிரிவுக்கு காரணம் என்று பேச்சு கிளம்பியது.

இன்ஸ்டாகிராம்

சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர்ந்து வாழப் போகிறார்கள் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் விவாகரத்து குறித்த போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் சமந்தா. மேலும் நாக சைதன்யாவின் புகைப்படங்களையும் நீக்கினார். இதன் மூலம் மீண்டும் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

ரூ. 200 கோடி

சமந்தாவுக்கு ரூ. 200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க நாக சைதன்யா முன்வந்ததாக செய்திகள் வெளியாகின. நானே நன்றாக சம்பாதிக்கிறேன், எனக்கு உங்கள் பணம் வேண்டாம் என்று சமந்தா கூறியதாக தகவல் வெளியானது. தானாக தேடி வந்த ரூ. 200 கோடியை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் சமந்தா என்று அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது.

சமந்தா

காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்ததற்கான காரணத்தை சமந்தா இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் தான் விவாகரத்து செய்ததற்கான காரணத்தை சமந்தா தெரிவித்துள்ளாராம். விவாகரத்து குறித்து முதல்முறையாக பேசியிருக்கிறார்.

சோபிதா

நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக கூறப்படுகிறது. அந்த வதந்தியை கிளப்பிவிட்டதே சமந்தா என்று நாக சைதன்யாவின் ரசிகர்கள் அவரை விளாசினார்கள். அதற்கு சமந்தா கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டார். பெண்ணை பற்றி வதந்தி வந்தால் உண்மையாக இருக்கும். பையனை பற்றி வந்தால்- கிளப்பிவிட்டது ஒரு பெண். சம்பந்தப்பட்டவர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டனர். போய், உங்கள் வேலையை பாருங்கள் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்