ஆப்நகரம்

Vijay:விடாமல் 150 முறை கேட்ட ஜெய்: முடியாதுனா முடியாதுனு சொன்ன விஜய்

விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டு 150 முறை கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை என்று நடிகர் ஜெய் தெரிவித்திருக்கிறார்.

Samayam Tamil 9 Sep 2021, 8:26 am
விஜய்யுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டு அவரிடம் வாய்ப்பு கேட்ட ஜெய்க்கு நோ சொல்லியிருக்கிறார்.
Samayam Tamil when vijay said no to jai
Vijay:விடாமல் 150 முறை கேட்ட ஜெய்: முடியாதுனா முடியாதுனு சொன்ன விஜய்


ஜெய்

2002ம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்திருந்தார் ஜெய். பகவதி படம் மூலம் கோலிவுட் வந்த ஜெய் அதன் பிறகு ஹீரோவாகிவிட்டார். தற்போது இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். இசை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் இசையமைப்பாளர் ஆனதில் ஆச்சரியம் இல்லை.

விழா

2021ம் ஆண்டின் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு சத்தமில்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசினார் ஜெய். அப்பொழுது அவர் விஜய் மற்றும் சிம்பு பற்றி பேசினார்.

விஜய்

ஜெய் கூறியதாவது, பகவதி படத்தில் விஜய் சாருக்கு தம்பியாக நடித்தேன். அதன் பிறகு அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இதுவரை 150 முறை விஜய் சாரிடம் வாய்ப்பு கேட்டுவிட்டேன். ஆனால் அவரோ, நீ தான் ஹீரோவாகிவிட்டல அப்புறம் என்ன என்று கேட்டார் என்றார்.150 முறை கேட்டும் ஜெய்க்கு விஜய் நோ சொன்னது ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

சிம்பு

ஜெய் வாழ்வில் காதல் வந்து போனது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவரிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, சிம்புவின் திருமணம் முடிந்ததும் செய்து கொள்வேன் என்றார். சிம்புவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடந்துவிடும் என்று ஜெய் கூறியிருக்கிறார். வீட்டில் சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை தேடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஜெய் இப்படி கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்