ஆப்நகரம்

பொங்கல் ரேஸில் களமிறங்கும் படங்கள்!

2018 பொங்கல் ரேஸில் 9 படங்கள் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

TNN 29 Dec 2017, 4:43 pm
2018 பொங்கல் ரேஸில் 9 படங்கள் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil which movies release on pongal
பொங்கல் ரேஸில் களமிறங்கும் படங்கள்!


2017ம் ஆண்டின் தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு இன்றுடன் முடிவடைகிறது. அதற்கடுத்து ஆரம்பமாக உள்ள 2018ம் ஆண்டில் வரும் முதல் வெள்ளிக் கிழமையான ஜனவரி 5ம் தேதி தற்போது வரை ‘விதி மதி உல்டா’ படம் மட்டுமே வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், பொங்கலை முன்னிட்டு பல படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே விசேஷ நாட்களில் ஐந்துக்கும் குறைவான படங்களே வெளிவருவது வழக்கமாக இருந்தது. ஆனால், வரும் பொங்கலுக்கு, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘குலேபகாவலி’, ‘கலகலப்பு 2’, ‘மதுர வீரன்’, ‘மன்னர் வகையறா’, ‘நிமிர்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, ‘ஸ்கெட்ச்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய 9 படங்கள் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது.

இது தவிர ஜனவரி வெளியீடு என ‘இரும்புத் திரை’, ‘டிக் டிக் டிக்‘ ஆகிய படங்கள் வெளிவரும் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்