ஆப்நகரம்

Rana Daggubati த்ரிஷாவின் நண்பர் ராணா திருமணம் செய்யப் போகும் மிஹீகா யார் தெரியுமா?

நடிகர் ராணா திருமணம் செய்யப் போகும் மிஹீகா பஜாஜ் யார் என்பது தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 13 May 2020, 10:04 am
தெலுங்கு நடிகர் ராணாவுக்கு 35 வயதாகிறது. மொரட்டு சிங்கிளாக இருந்த அவர் மிஹீகா பஜாஜ் என்கிற பெண்ணை திருமணம் செய்யப் போவதாக புகைப்படத்துடன் ட்வீட் செய்தார். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil rana daggubati


ராணாவின் வருங்கால மனைவியான மிஹீகா பஜாஜ் யார் என்று பலரும் கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த மிஹீகா பன்ட்டி மற்றும் சுரேஷ் பஜாஜ் தம்பதியின் மகள். மிஹீகாவின் அம்மா பன்ட்டி நகை வியாபாரத் துறையில் பிரபலமானவர். அவரின் கடையான க்ரிசாலா மிகவும் பிரபலமானது. ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தில் படித்த பன்ட்டி முதலில் இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் வைத்து நடத்தினார். அதன் பிறகு நகைகளை டிசைன் செய்யும் வேலைக்கு சென்றுவிட்டார்.

மும்பையில் இன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படித்த மிஹீகா லண்டனில் இருக்கும் செல்சீ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். மும்பையில் ஓராண்டு காலம் இன்டர்ன் டிசைனராக வேலை செய்த அவர் பின்னர் எழுத்தாளர் ஆனார். கடந்த 2017ம் ஆண்டு அவர் டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோ என்கிற இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.

மிஹீகா தன் வேலை காரணமாக மும்பைக்கும், ஹைதராபாத்திற்கும் பயணம் செய்து கொண்டிருக்கிறார். பாலிவுட் நடிகை சோனம் கபூரின் குடும்பத்தாருடன் நெருக்கமானவர் மிஹீகா. அவருக்கு சமையல் செய்ய பிடிக்குமாம். புத்தகம் வாசிப்பது, எழுதுவது பிடிக்குமாம். மேலும் குதிரை சவாரியும் செய்வாராம்.

இந்த பெண்ணை தான் கட்டிக்கப் போகிறாராம் நம்ம பாகுபலி பல்லா

அடுத்த செய்தி

டிரெண்டிங்