ஆப்நகரம்

ஜென்டில்மேன் 2 படத்தின் ஹீரோ இவரா? தீயாய் பரவும் தகவல்!

ஜென்டில்மேன் 2 படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Mar 2022, 5:23 pm
1993ஆம் ஆண்டு கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான படம் ஜென்டில்மேன். இந்தப் படத்தின் மூலம் தான் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் மற்றும் மதுபாலா லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.
Samayam Tamil Genetlemen

#RRR: ப்பா... எக்ஸ்ட்ராடினரி... ஒரு பீட் கூட மிஸ் பண்ணல... பாராட்டு மழையில் பிரபல நடிகர்!
மேலும் மனோரமா, செந்தில், கவுண்டமணி என பெரும் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இப்படம். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அறிவித்தார்.


ஜென்டில்மேன் 2 படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்கவுள்ளதாகவும் அறிவித்தார் கேடி குஞ்சுமோன். மேலும் மலையாள நடிகையான நயன்தாரா சக்கவர்த்தி என்பவர்தான் இப்படத்தில் ஹீரோயின் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிச்சுட்டாருப்பா... ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடும் ரசிகாஸ்... தெறிக்கும் டிவிட்டர்!
அதன்படி நடிகர் அர்ஜூன் தான் ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அர்ஜூன் தான் படத்தின் ஹீரோ என தகவல் பரவி வருகிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் இப்போதுள்ள இளம் ஹீரோக்கள் யாரையாவது தேர்வு செய்யலாமே என கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்