ஆப்நகரம்

”இந்த உலகம் முழுவதும் எனக்கு விளையாட்டு மைதானம்”: ஏ.ஆர்.ரகுமான்..!

’தனது இசைக்கு இந்த உலகம் முழுவதும் ஒரு விளையாட்டு மைதானம்’ என இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

TNN 6 May 2017, 4:26 pm
’தனது இசைக்கு இந்த உலகம் முழுவதும் ஒரு விளையாட்டு மைதானம்’ என இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil whole world is a playground for me a r rahman
”இந்த உலகம் முழுவதும் எனக்கு விளையாட்டு மைதானம்”: ஏ.ஆர்.ரகுமான்..!


ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், ஒரு கலைஞனுக்கு எந்த வரையறையும் இருக்கக்கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்தினார். ” ஒரு கலைஞன் என்பவன் தனது கலையை மட்டுமே அளிக்க படைக்கப்பட்டவன். உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் அளியுங்கள்.ஆனந்தமடையுங்கள். உங்களிடம் உள்ளதை உலக மக்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் தலையில் நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன்,வட இந்தியாவை சேர்ந்தவன், இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற வரையறை இருக்கக் கூடாது.

எனக்கு, இந்த உலகம் முழுவதும் ஒரு விளையாட்டு மைதானம். எனவே உலகின் அனைத்து மக்களின் மனதை தொடும் அளவில் சில விஷயங்களை செய்ய வேண்டும். உலகின் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும்.” என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

Whole world is a playground for me: A.R. Rahman

அடுத்த செய்தி

டிரெண்டிங்