ஆப்நகரம்

கீர்த்தி சுரேஷ் அடுத்த ஜோடி யார்

‘பாகுபலி’ படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படத்தில் சர்வானந்த் ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம்

TNN 8 Jul 2017, 6:10 pm
‘பாகுபலி’ படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படத்தில் சர்வானந்த் ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம்
Samayam Tamil whos is the next pair of keerthy suresh
கீர்த்தி சுரேஷ் அடுத்த ஜோடி யார்

தமிழில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே நடிகை கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சிவகார்திகேயன் , தனுஷ் , விஜெய் போன்ற டாப் ஹிரோக்களிடன் நடித்திருந்தாலும் அவரால் இன்னும் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை . ஆனால் தெலுங்கில் அவர் நடித்த ‘நேனு சைலஜா’ படம் மூலம் பெருவாரியான தெலுங்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்தளவுக்கு மிக அழுத்தமான கதாபாத்தில் நடித்திருக்கிறார்.
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு சம்பந்தமாக எடுக்கப்படும் ‘மகாநதி’ என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததற்கு ‘நேனு சைலஜா’ படத்தின் நடிப்புதான் காரணமாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், ‘பாகுபலி’ படங்களை தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தன் கைவசமுள்ள படங்களில் நடித்து முடித்ததும் சர்வானந்த் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

who’s is the next pair of keerthy suresh

அடுத்த செய்தி

டிரெண்டிங்